↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும்போது அதை எதிர்ப்பது குறித்து யோசித்து வருவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். சமீப காலமாக டிவிட்டரில் அரசியல் செய்து வரும் சாமி இதையும் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அணுகவுள்ளனர். இதுகுறித்து டிவிட் மூலம் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியம் சாமி, ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும்போது அதில் நான் தலையிட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதுகுறித்து யோசித்து வருகிறேன். ஏனென்றால், அதிமுகவினர் தொடர்ந்து என்னைப் பற்றி மோசமாக பேசி வருகின்றனர் என்று கூறியுள்ளார் சாமி. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் சாமிதான் என்பது நினைவிருக்கலாம். ஜெயலலிதா கைது செய்யப்படுவதற்கு முன்பு சாமி மீது அதிமுக அரசு ஏராளமான அவதூறு வழக்குகளைப் போட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
jeyalalitha
»
news
»
news.india
» ஜெ. ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பது குறித்து யோசித்து வருகிறேன் - சாமி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment