உலகின் பல நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் ஒருபாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 19 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொண்டு இணையராக வாழ்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், இங்குள்ள நெவேடா, இடாஹோ, அலாஸ்கா, அரிஸோனா, மாண்ட்டானா போன்ற மாநிலங்களில் இத்தகைய திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடையை நீக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த 9-வது மேல் முறையீட்டு நீதி மன்றம் இந்த தடையை நீக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 comments:
Post a Comment