↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஹைதராபாத் டைம்ஸ் வெளியிட்ட 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஹைதராபாத் பிரிவு 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் யார் என மக்களிடையே ஆன்லைன் மூலமாக வாக்கெடுப்பு நடத்தியது. மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் 2014ம் ஆண்டில் ஆந்திர மக்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 25 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலின் விவரம் வருமாறு,

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சானியா மிர்ஸா தான் 2014ம் ஆண்டில் ஆந்திர மக்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண் ஆவார். கடந்த ஆண்டு 11வது இடத்தில் இருந்த அவர் இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.

மார்க்கெட் படுத்துவிட்டாலும் ஆந்திர மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் ஸ்ரேயா சரண். ஹைதராபாத் டைம்ஸ் பட்டியலில் சானியா மிர்ஸாவுக்கு அடுத்த இடத்தில் ஸ்ரேயா உள்ளார்.

தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அனுஷ்கா தான் 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த பட்டியலில் 15வது இடத்தில் இருந்தார்.

கடந்த ஆண்டு ஹைதராபாத் டைம்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஸ்ருதி ஹாஸன் இந்த ஆண்டு 4வது இடத்திற்கு வந்துவிட்டார். ஸ்ருதிக்கு தமிழ், இந்தி தவிர தெலுங்கு திரை உலகிலும் மவுசு உள்ளது.

ஹைதராபாத் டைம்ஸ் பட்டியலில் 5வது இடத்தில் பூஜா ஹெக்டேவும், 6வது இடத்தில் தமன்னாவும், 9வது இடத்தில் சமந்தாவும், 10வது இடத்தில் ஹன்சிகாவும், 14வது இடத்தில் நயன்தாராவும், 20வது இடத்தில் காஜல் அகர்வாலும் உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top