காதலுக்கு கோட்டை கட்டி வாழ வைத்தவர் இயக்குனர் அகத்தியன். இன்று அவர் தமிழ் சினிமாவில் ஜொலிக்கவில்லை என்றாலும் அவர் வாரிசான விஜயலக்ஷ்மி இன்றும் தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜயலட்சுமி காதலில் விழுந்தார் என்று தகவல் கசிந்துள்ளது. இதை விசாரித்த போது பிரபல இயக்குனர் அறிவழகனின் துணை இயக்குனர் பெரோஸை காதலிக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இவர் மிக விரைவில் அருள்நிதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த விவகாரம் பற்றி அகத்தியன் காதுக்கு விழ அவரும் ஓகே சொல்லி இருக்கிறாம். மிக விரைவில் திருமண செய்தி வெளி வரும் என்று கோடம்பாக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment