↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கணவரை அபகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகை அல்போன்சா நேற்று தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சைதாப்பேட்டையை சேர்ந்த சுஜாதா என்பவர் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை கொலை செய்து விடுவதாக அல்போன்சா மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

புகார் மனுவுடன் அல்போன்சாவும் ஜெய்சங்கரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் அடங்கிய சி.டி.யையும் கொடுத்திருந்தார். மத்திய குற்றப் பிரிவு கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வரதட்சணை தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி இது குறித்து விசாரணை நடத்தினார். சுஜாதாவை நேரில் அழைத்தும் விசாரித்தார். அப்போது ஜெங்சங்கரை 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அல்போன்சா கலந்து கொண்டார் என்றும் தெரிவித்தார். தனக்கும் ஜெய்சங்கருக்கும் திருமணம் நடந்ததற்கான புகைப்பட ஆதாரங்களையும் வழங்கினார்.

இதையடுத்து நடிகை அல்போன்சாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் தேடி வருகிறார்கள். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் அல்போன்சாவுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top