இந்திய அணி உலகக்கிண்ணத் தொடரில் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் போது, அணித்தலைவர் டோனிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஜிவா’ என்று பெயர் வைத்தனர்.
இருப்பினும் உலகக்கிண்ணப் போட்டிகளில் நாட்டுக்காக விளையாடுவது தான் முக்கியம் என்று கூறி டோனி மகளை பார்க்க வரவில்லை.
உலகக்கிண்ண போட்டிகளில் இருந்து இந்திய அணி வெளியேறிய பிறகே நாடு திரும்பி அவர் தனது மகள் ஜிவாவை பார்த்தார்.
இதைத் தொடர்ந்து முதலில் மகளின் முகத்தை பத்திரிக்கைகாரர்கள், புகைப்படக்காரர்களிடம் காட்ட டோனி மறுத்தார். ஆனால் தற்போது மகளின் முகத்தை வெளி உலகுக்கு காட்டி வருகிறார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் டோனி 3 மாத மகளுடனே வலம் வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்த போட்டியில் டோனியின் மனைவி சாக்ஷி குழந்தையுடன் கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்தார். சக வீரர்களும் குழந்தையை ஆர்வத்துடன் பார்த்தனர்.
அப்போது தனது செல்ல மகள் குறித்து டோனி கூறுகையில், ஒரு குழந்தை நம் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருகிறது.
என் மகளின் சிரிப்பு என் வாழ்க்கையை மாற்றி வருகிறது. இது போன்று தான் அனைவர் வாழ்விலும் நடக்கிறது.
என் மகள் பிறந்தபோது நான் இந்தியாவில் இல்லை. அவர் பிறந்த உடனே அவரை பார்க்க முடியவில்லை. அதை நினைத்தால் கடினமாக தான் இருந்தது.
நான் நாட்டுக்காக விளையாடுகிறேனா அல்லது சென்னை அணிக்காக விளையாடுகிறேனா என்பது பற்றி எல்லாம் ஜிவாவுக்கு கவலை இல்லை. அவளுக்கு அழ வேண்டும். அவ்வளவு தான் போல என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment