↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீஸார் சரவணன் என்ற பெயரில் ஒருவரைக் கைது செய்துள்ளது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. இவரும் நடிகர்தான். ஆனால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நடிகர் சரவணன் அல்ல என்றும் கடத்தல் பணத்தில் படம் எடுத்து நடிகராக அவதாரம் பூசிக் கொண்ட சி. சரவணன் என்று தெரிய வந்துள்ளது. இந்த சரவணனின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் (பாடி) ஆகும். இவரைத்தான் தற்போது சித்தூர் போலீஸார் கைது செய்துள்ளனராம்.

31 வயதானவர் இந்த சரவணன். முன்னவர் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இது இவரது சொந்தப் படமாகும். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த வாகனத்தில் 11 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தபோது, சித்தூர் மாவட்டம் குடிபாலா என்ற இடத்தில் நடந்த போலீஸ் சோதனையில் சிக்கினார். விசாரணையில் நீண்ட நாட்களாக இவர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் அளித்த தகவலின் பேரில், பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 127 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செம்மர கடத்தலில் நீண்ட நாட்களாக ஈடுபட்டுள்ளார் சரவணன். இதில் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. இதனால் சரவணனுக்கு சினிமாவில் படத்தில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே சொந்தமாக தமிழ் சினிமா தயாரித்து அதில் நடித்தார். பலகோடி முதலீடு செய்து படம் எடுக்க முடிவு செய்தார். இதற்கு முன்னவர் என்று பெயர் சூட்டினார். தொடர்ந்து படம் எடுத்து நடித்தும் வருகிறாராம். முன்னவர் படம் இதுவரை வரவில்லை. வேல்ராஜ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியு்ளார். கேரளாவைச் சேர்ந்த ரஞ்சுஷா என்பவர்தான் நாயகியாக நடித்துள்ளார். சரவணன் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில் தனது சகோதரர் லட்சுமணன் படத் தயாரிப்பாளராக உள்ளதாக கூறியுள்ளாராம். 


மேலும் ஒரு புதிய படத்திற்காக ரூ. 2 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கடத்தல் விவகாரத்தில் பல நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சரவணன் கூறியுள்ளாராம். ஆனால் இவர்கள் தெலுங்குப் பட உலகைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சரவணனுக்கு தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பலர அரசியல் பிரபலங்களுடன் தொடர்பு உள்தாம். முன்னவர் படம் தவிர சிட்டு போல பொண்ணு, படபடவென, புருஷன் வீட்டில், அடி நெஞ்சில் சிறகு முளைக்க, நிலவு கவிதையில் போன்ற படங்களிலும். அவர் நடிக்க இருந்ததாக தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top