↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
lakshmi menon
9ம் வகுப்பு படிக்கும் போதே சினிமாவிற்கு வந்துவிட்டார் லட்சுமி மேனன். அதுவும் நாயகியாக அறிமுகமானார். வயது கம்மியாக இருந்தாலும் இவரது முதுமையான தோற்றம் தான் இவருக்கு திரையுலகில் நாயகி வாய்ப்பை பெற்று தந்தது.

கிராமத்து கதை என்றால் லட்சுமி மேனன் வீட்டிற்குதான் படை எடுக்கிறார்கள் இயக்குனர்கள். அந்தளவிற்கு கிராமத்து வேடத்துக்கு கட்சிதமாக பொறுந்துகிறார் லட்சுமி மேனன். ஆனால் தொடர்ந்து பாவாடை தாவணி அணிந்து நடிப்பதற்கு லட்சுமி மேனன் அலட்டி கொள்கிறார். என்னை விட மூத்த நடிகைகள் கூட மாடர்ன் ட்ரெஸ் போட்டு நடிக்கும் போது எனக்கும் அந்த மாதிரி ட்ரெஸ் போட்ட வேண்டும் என்று ஏன் இயக்குனர்களுக்கு தோன்றவில்லை என்று லட்சுமி மேனன் தனது நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.
இதனால் லட்சுமி மேனன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, லட்சுமி மேனனா இது என்று அனைவரும் மூக்கு மேல் விரல் வைக்கும் அளவிற்கு மாடர்ன் உடை, ஸ்பெஷல் மேக்கப்புடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த ஸ்டில்களை இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளாராம் லட்சுமி மேனன்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top