நடப்பு ஐ.பி.எல் தொடரின் 22வது போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ரஹானே 18 ஓட்டங்களும், அணித்தலைவர் ஷேன் வாட்சன் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஸ்டிவன் ஸ்மித் 31 ஓட்டங்களும், கருண் நாயர் 16 ஓட்டங்களும், ஸ்டுவர்ட் பின்னி 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒன்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.
பந்துவீச்சில் பெங்களூர் சார்பில் மிட்செட் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், யுஷ்வேந்திரா சாகல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 131 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 16.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள்
எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரராக களமிறங்கிய கெய்ல் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்காமல் மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் கோஹ்லி அரைசதம் கடந்து 62 ஓட்டங்களும், டிவில்லியர்ஸ் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆட்டநாயகனாக மிட்செல் ஸ்டார்க் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment