கறுப்பு வெள்ளை காலத்தில் நடித்த ஹீரோயின்களில் சாவித்ரிக்கு சிறந்த நடிகை என்ற பெயர் இருக்கிறது. அதே சாவித்ரி பெயருடன் ‘இசை' படம் மூலம் அறிமுகமாகி இருக்கும், சாவித்ரியோ கவர்ச்சியாக நடித்தால் தப்பு என்ன என்று கேட்கிறார்.
இதுபற்றி அவர் கூறியது:தமிழ், இந்தி, மராத்தி என 3 மொழியில் தலா ஒவ்வொரு படம் நடித்திருக்கிறேன். பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது நடிப்பு தொழிலில் ஒரு அங்கம் என எண்ணுகிறேன். இசை படத்தில் கதைப்படி கிளாமர் தேவைப்பட்டது. அதனால் கவர்ச்சி காட்டி நடித்தேன். அதில் தவறு இருப்பதாக எண்ணவில்லை.
படத்தின் முதல்பாதியில் கிளாமராக நடித்தாலும் 2ம்பாதியில் நடிப்பின் மூலம் அதை நிவர்த்தி செய்திருக்கிறேன். நான் செய் தது சரிதானே? தற்போது நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருந்தால் முன்னுரிமை கொடுப்பேன். தமிழ் ரசிகர்களுக்கு சாவித்ரி பெயர் பிடித்திருப்பதால் அந்த பெயரிலேயே தொடர்ந்து நடிப்பேன்.
0 comments:
Post a Comment