↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
shruti haasan

ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது எதாவது சர்ச்சைகளிலும் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி பரபரப்பான நாயகியான வலம் வருகிறார்.

சமீபத்தில் ஸ்ருதிஹாஸன் அளித்த பேட்டியில் ‘எப்படிப்பட்டவரை திருமணம் செய்து கொள்வீர்கள்?’ என்று கேட்டிருந்தனர். அதற்கு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை. திருமணம் பற்றி சில நம்பிக்கையும் இருக்கிறது. கணவராக வருகிறவர் என் ஆத்மாவை திருடுபவராக இருக்க வேண்டும். திருமணம் பற்றி முடிவு எடுத்துக்கொள்ள எனக்கு வாய்ப்பு கொடுத்தால் திருமணமே செய்து கொள்வது இல்லை என்ற முடிவை எடுப்பேன். திருமணம் என்பது சிக்கலானது. இதற்காக திருமண முறைக்கு நான் எதிர்ப்பு என எடுத்துக்கொள்ள கூடாது. என் நண்பர்கள் சிலர் அழகான திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
திருமணத்தை ஏன் சிக்கலானதாக பார்க்கிறீர்கள்?
என் கவனம் எல்லாம் இப்போது சினிமாவில் தான் இருக்கிறது. அதில் இருந்து சிந்தனையை திசை திருப்பும் எண்ணம் இல்லை. இருபது வயதை தாண்டும் என் வாழ்க்கையில் சாம்பார் சாதம் இதுவரை பிடித்த உணவாக இருந்து இருக்கிறது. எனக்கு கணவராக வருகிறவர் நான் விரும்பி சாப்பிடும் சாம்பார் சாதம் போல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகள்தான் ஏற்படும். எனவே அப்படி பிடித்தமானவர் கணவராக அமையாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
சினிமாவில் இருப்பவரை மணப்பீர்களா?
ஆமாம் திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன். அதில் சில பிரச்சனைகள் இருந்தாலும் நிறைய நன்மைகள் இருக்கிறது.
அப்படிப்பட்டவரை திரையுலகில் சந்தித்து விட்டீர்களா?
இதுவரை சந்திக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top