நொவோசெல்ட்செவ், கேத்ரீனா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருப்பினும் தன் காதலை கேத்ரீனாவிடம் கூற நொவோசெல்ட்செவ் தயங்கி வந்தார்.
இந்நிலையில் நொவோசெல்ட்செவ் விளையாடி வரும் ரஸ்டோவ் கால்பந்து அணிக்கும், டர்பிடோ மாஸ்கோ அணிக்கும் ரஷ்யன் பிரீமியர் லீக்கில் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் ரஸ்டோவ் கால்பந்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை பார்க்க கேத்ரீனாவும் வந்திருந்தார்.
இதனையடுத்து நொவோசெல்ட்செவ் சக விளையாட்டு வீரர்களிடம் காதலில் வெற்றி பெற யோசனை கேட்டார். அவர்கள் கேத்ரீனா கையில் மோதிரத்தை அணிவிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மைதானத்தில் நின்று கொண்டிருந்த கேத்ரீனாவின் கையில் மோதிரத்தை அணிவித்து தனது காதலை கூறினார். அதை கேத்ரீனாவும் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் போட்டியிலும், காதலிலும் வெற்றி பெற்ற பெருமையோடு மைதானத்தை சுற்றி வந்தார் நொவோசெல்ட்செவ்.
வீரர்களை விரட்டியடித்த தவளைகள்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டிற்கு இடையூறாக ஆயிரக்கணக்கான தவளைகள் நுழைந்ததால், போட்டிகளை நடுவர் அவசரமாக நிறுத்தியுள்ளார்.
சூரிச் மண்டலத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் Embrach மற்றும் Räterschen அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்று வந்தது.
இரண்டு அணிகளும் தலா 2-2 என்ற புள்ளிகளுடன் இருந்தபோது, மைதானத்திற்குள் சிறிய அளவில் தவளைகள் நுழைய தொடங்கியுள்ளன. இருப்பினும் விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு ஆயிரக்கணக்கான தவளைகள் மைதானத்திற்குள் படையெடுப்பது போல் கும்பல் கும்பலாக வந்ததால், விளையாட்டு வீரர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
விளையாட்டு மைதானம் முழுவதும் தவளைகள் சூழ்ந்ததால், போட்டிகளை தொடர்ந்து நடத்த முடியாமல் நடுவர் விளையாட்டை நிறுத்துவதாக அறிவித்தார்.
விளையாட்டு மைதானத்திற்கு தவளைகள் வருவது வாடிக்கை தான் என்றாலும், இவ்வளவு எண்ணிக்கையில் இதுவரை வந்தது இல்லை என விளையாட்டு வீரர்கள் வியப்புடன் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment