↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் காலத்தில் மக்களால் ஃபேஸ்புக் இல்லாமல் இருக்க முடியவில்லை. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர், முகவரி கேட்பதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது நிலைமை. ஃபேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில் உள்ளனர். இந்நிலையில் பேஸ்புக் ஹலோ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்துகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஃபேஸ்புக் நண்பர்களை அவர்களின் செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் செல்போனில் குறிப்பிட்ட ஃபேஸ்புக் நண்பரின் செல்போன் எண் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. அந்த நபர் ஃபேஸ்புக்கில் செல்போன் எண்ணை குறிப்பிட்டிருந்தால் ஹலோ அப்ளிகேஷன் அங்கிருந்து எண்ணை எடுத்துக் கொள்ளும். ஃபேஸ்புக் மெசஞ்சர் குழு உருவாக்கியுள்ள இந்த ஹலோ அப்ளிகேஷன் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. உங்களுக்கு பிடிக்காத நபர் ஃபேஸ்புக் மூலம் அழைத்தால் அவரை நீங்கள் பிளாக்(block) செய்யும் வசதியும் உள்ளது. இது தவிர ஃபேஸ்புக் மூலம் பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Home
»
facebook
»
technology
»
technology.others
» இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம் பாஸ்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment