இப்படத்தின் புரமோஷன் கருதி நேற்று நடந்த பிரஸ் மீட்டில் டாப்சி தனது கேரக்டர் குறித்து பேசினார். ஒரு வருடம் கழித்து ‘காஞ்சனா 2’ மற்றும் ‘வை ராஜா வை’ படங்கள் மூலம் தமிழில் மீண்டும் களமிறங்கியிருக்கும் டாப்சி பேசுகையில், ‘வை ராஜா வை’ படம் என்னுடைய படமல்ல.
நான் படத்தின் ஹீரோயினாகவோ, அல்லது ஹீரோயின் அளவிற்கு உள்ள பாத்திரத்திலோ நடிக்கவில்லை. எனினும் எனது கேரக்டர் தனித்துவமானது. சிறப்பு தோற்றம் தான் எனினும் நான் இல்லாமல் குறிப்பிட்ட சீனோ அல்லது க்ளைமாக்ஸோ படத்தில் இல்லை என்பது தான் இதில் ஹைலைட்.
முதல் முறையாக இந்த படத்தின் மூலம் கேசினோ விளையாடும் இடத்தின் அனுபவம் கிடைத்தது. கேசினோவில் எப்படி விளையாட வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. எனக்கு அதற்கு நேரமும் இல்லை. இந்த படத்தை பொருத்தமட்டில் எனக்கு ஐஸ்வர்யா தனுஷ் தான் டீச்சர். எப்படி விளையாட வேண்டும் என சொல்லிக் கொடுத்தார்.
எனது ரோல் படத்தில் மிகவும் ஜாலியாக இருக்கும் , நான் கேசினோவின் செய்தி தொடர்பாளராக நடித்துள்ளேன். என கூறியவர் ஐஸ்வர்யா தனுஷ் குறித்து கூறுகையில் இயக்குநர்களில் ஆண் , பெண் சமமாக பார்க்க வேண்டும். எனக்கு மற்ற இயக்குநர்கள் போலதான் ஐஸ்வர்யாவும் தெரிந்தார். என கூறி வழக்கமான வெள்ளைப் புன்னகையை உதிர்த்தார்.
0 comments:
Post a Comment