ஐ.ஐ.டி. மாணவர்களின் காமெடி நடனம் யூ-டியூபில் வைரல் ஹிட்டாக வலம் வருகிறது.
பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள் நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை, பாத்ரூம் ஷவர், ஓடும் பேருந்து, நீச்சல் குளத்தின் உள்ளே, என்று வித விதமான லொகேஷன்களில் பாடவும் செய்வர்கள்.
3.5 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை ஃப்ரேம் பை ஃப்ரேமாக அப்படியே காப்பி அடித்து சட்டை அணியாமல் மாடல்களைப் போல் தத்ரூபமாக அதேபோல் நடனமாடும் ஐ.ஐ.டி. மாணவர்களின் அடாவடி காமெடி தான் இந்த வீடியோவின் ஹை லைட்டே.
டெல்லி கரகோரம் ஐ.ஐ.டி. கேம்பசில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் ’ஹவுஸ் டே’ எனப்படும் விழாவை முன்னிட்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 17 ஆம் தேதி யூ-டியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் பார்த்து, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து வயிறு வலிக்க குலுங்கி குலுங்கி சிரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment