12ம் வகுப்பு தேர்வில் பிஸியாக இருந்ததால் கொம்பன் படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிக்க மறுத்து வந்தார் லட்சுமி மேனன்.
லட்சுமி மேனன் திருமணத்திற்கு தயாராகி வருவதால் பட வாய்ப்புகளை மறுத்து வருவதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்தது. தற்போது அதற்கு பதிலளித்த லட்சுமி மேனன், நான் திருமணத்துக்கு இன்னும் தயார் ஆகவில்லை. தனியாக இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.
நிறைய ஆண்களை நான் ஏமாற்றி இருக்கிறேன். எனவே காதல் கல்யாணம் போன்ற உறவுகளுக்கு நான் தகுதி இல்லை என்று கருதுகிறேன். நான் சினிமாவை விட்டு விலகப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அப்படி யாரிடமும் நான் சொல்லவில்லை. அஜித் படத்தில் அவரது தங்கையாக நடிக்க என்னிடம் கேட்டுள்ளனர் என்று லட்சுமி மேனன் கூறினார்.
0 comments:
Post a Comment