↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓடினால் கன்னித்தன்மையை இழந்துவிடுவார்களாம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ளது அல் தக்வா இஸ்லாமிய பள்ளி. அந்த பள்ளியின் முதல்வர் உமர் ஹல்லாக் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளார். மாணவிகள் அதிகம் ஓடினால் அவர்கள் கன்னித்தன்மையை இழந்துவிடுவார்கள் என்று உமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மாவட்ட அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான ஓட்டப்பந்தயத்தில் மாணவிகளை அவர் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அந்த போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி பெற்ற மாணவிகள் உமரின் பேச்சை கேட்டு சோர்வடைந்தனர். தங்களை போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கூறி அவர்கள் உமருக்கு கடிதம் எழுதியும் பலனில்லை.
மேலும் மாணவிகள் கால்பந்து விளையாடுகையில் கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டால் அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்று நம்புகிறார் உமர்.இந்நிலையில் அந்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் உமரின் நடவடிக்கைகள் பற்றி கல்வி அமைச்சருக்கு புகார் அனுப்பியுள்ளார். இது குறித்து விக்டோரியா மாநில கல்வி அமைச்சர் ஜேம்ஸ் மெர்லினோ கூறுகையில், உமர் மீதான புகார் உண்மை எனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Home
»
news
»
news.world
» மாணவிகளே ஓடாதீங்க, கன்னித்தன்மை போயிடும்: இஸ்லாமிய பள்ளி முதல்வர் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment