↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஓகே கண்மணி படம் குறித்த தனது கருத்துக்கள் மம்மூட்டியின் மனதைப் புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சர்ச்சைக் கருத்துக்களுக்கு பேர் போனவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தைப் பார்த்து விட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார் அவர். அதில் அவர் அப்பட நாயகனும், நடிகர் மம்மூட்டியின் மகனுமான துல்கர் சல்மானின் நடிப்பு குறித்து பாராட்டி இருந்தார்.
அதே சமயத்தில், ‘விருது வழங்குபவர்களுக்கு சிறிதளவேனும் நியாய உணர்வு இருந்தால், மம்முட்டிக்கு வழங்கிய விருதுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவற்றை அவரது மகன் துல்கர் சல்மானுக்கு வழங்கிவிடுவார்கள்.
அவரது மகனோடு ஒப்பிடும்போது மம்முட்டி வெறும் ஜூனியர் ஆர்டிஸ்டே. தனது மகனிடமிருந்து மம்முட்டி நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும்' என மம்மூட்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்திருந்தார்.
அப்பாவின் நடிப்பில்...
ராம் கோபால் வர்மாவின் இந்தக் கருத்து திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் துல்கர் தனது பேட்டி ஒன்றில், ‘இன்னும் 10 பிறவி எடுத்தாலும், நான் எவ்வளவும் சாதித்தாலும், என் தந்தையின் நடிப்புத் திறமையில் மில்லியனில் ஒரு சதவீதம்கூட என்னால் ஈடுகொடுக்க முடியாது' என மறைமுகமாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் துல்கரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதில் அவர், ‘நான் என் மனதில் பட்டதை அப்படியே பேசியும், மகிழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் வெளிப்படுத்தியும் பழக்கப்பட்டவன்.
நான் அப்படிப் பேசுவது இது முதல்முறையல்ல. உயர்ந்த தந்தை ஒருவரின் மிக சிறப்பான மகன் என்ற பொருள்படுமாறே நான் பேசியிருந்தேன் ஆனால் சில முட்டாள்களால் அந்த வகையான வாழ்த்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தந்தையிடமும் இதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரை எனது ட்வீட்டுகள் புண்படுத்தியிருக்குமேயானால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த மன்னிப்பு டுவீட்டை சிறிது நேரத்திலேயே அவர் தனது பக்கத்தில் இருந்து அழித்தும் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment