↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரில் நாளை நடக்கவுள்ள காலிறுதிப் போட்டியில் சச்சினின் சாதனையை சமன்செய்ய சங்கக்காராவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
நடப்பு உலக்க்கிண்ணத் தொடரில் அசத்தி வரும் சங்கக்காரா தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசி வரலாறு படைத்தார்.
இவர் சிறந்த பார்மில் இருப்பதால், நாளை நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் காலிறுதி ஆட்டத்திலும் சதம் விளாச வாய்ப்பிருக்கிறது.
சங்கக்காரா இதுவரை 5 உலகக்கிண்ணத்தில் விளையாடி 5 சதங்களை குவித்துள்ளார். அவர் நாளைய போட்டியிலும் சதம் அடிக்கும் பட்சத்தில் அவரது உலகக்கிண்ண சதங்களின் எண்ணிக்கை 6 ஆக உயரும்.
இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினுடைய உலகக்கிண்ண சாதனையை சமன் செய்ய அவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
6 உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ள சச்சின், 6 சதங்களை எடுத்துள்ளார்.
நாளை நடக்கவுள்ள போட்டியில் சங்கக்காராவை விரைவில் வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் சில வியூகங்களை செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top