கண்கள் சற்று பெரிதாகவும், இமைகள் நீளமாகவும் இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக தெரிவார்கள்.
செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கண் இமைகளை வளர்க்கலாம், ஆனால் அதற்கு சில இயற்கை வழிமுறைகளும் உள்ளன.
கண் இமைகள் வளர சில டிப்ஸ்
1. தினமும் ஆமணக்கெண்ணெயை தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். வேண்டுமென்றால் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி கூட தடவலாம்.
இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.
2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம்.
இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.
3. தினமும் இமைகளை சுத்தமான சீப்பால் சீவ வேண்டும். அப்படி சீவும் சீப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சீப்பானது சிறிதாகவும் இருக்கலாம் அல்லது மஸ்காரா ப்ரஸ் வைத்தும் சீவலாம்.
அதிலும் ஏதேனும் ஒரு இயற்கை எண்ணெயில் நனைத்து சீவினால் நல்லது. கண் இமைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சீவ வேண்டும்.
4. ஆமணக்கெண்ணெய்/வைட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வாஸ்லினை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த நன்மையைத் தரும். இரவில் படுக்கும் முன் கண் இமைகள் மீது வாஸ்லினைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விட வேண்டும்.
அப்படி கழுவ மறந்து விட்டால் அன்று முழுவதும் பிசுபிசுப்புடன் இருக்கும்.
5. நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப் பெறலாம்.
நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோட்டீன் உணவை உண்ண வேண்டும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.