↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad துடிப்பின்றி இயங்கும் இயந்திர இதயத்தை அவுஸ்திரேலியா விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த மருத்துவர் டேனியல் டிம்ஸ்(Daniel Tims) வடிவமைத்துள்ள இந்த இதயத்தை செம்மறி ஆட்டுக்கு பொருத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த இயந்திர இதயத்தில் சிறிய பிளேடு டிஸ்க்(Blade stick) உள்ளது. இது நிமிடத்துக்கு 2 ஆயிரம் தடவை சுழன்று துடிப்பின்றி உடல் முழுவதும் ரத்தத்தை பாய்ச்சும் திறன் படைத்தது.
கடந்த ஜனவரி மாதத்தில் பிரிஸ்பேன்(Brisbane), டெக்காஸ்(Tekkas), சிட்னி(Sydney) மற்றும் மெல்போர்ன்(Melbourne) நகரங்களை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் செம்மறி ஆட்டின் இருதயத்தை அகற்றிவிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குரிய அளவிலான இயந்திர எலெக்ட்ரானிக் இதயத்தை பொருத்தி வெற்றிகரமாக சோதித்தனர்.
இதே முறையில் மனிதர்களுக்கும் இந்த இதயத்தை பொருத்த முடியும் என நம்புகின்றனர்.
இன்னும் 3 ஆண்டுகளில் மனிதர்களிடம் இதற்கான சோதனை முயற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top