↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஆண்களுக்கு மிகவும் சாதாரணமாக வரக்கூடிய 5 ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றியும் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் அண்மையில் நடந்த ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லயோலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெவின் போல்ஸ்லே என்பவர், மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வதை, வழக்கமாக செய்ய வேண்டிய செயல்கள் அடங்கிய முடிவில்லா பட்டியலில் உள்ள ஒரு செயல்களில் ஒன்றாகவே ஆண்கள் கருதுகிறார்கள், இவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலில் தங்களுடைய சுகாதாரத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியதும், இந்த விஷயத்தை முதன்மையாக கருத வேண்டியதையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்கிறார்.
ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சுகாதார பிரச்சனைகளில் ஒன்றாக இதய நோய் உள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு தான் மாரடைப்பு வரும் ஆபத்து உள்ளது மற்றும் குடும்ப வரலாற்றுப் படி யாருக்கேனும் மாரடைப்பு இருந்தால், இந்த ஆபத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், ஆண்கள் புகைப்பிடித்தாலோ, அதிக கொழுப்பை கொண்டிருந்தாலோ, இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மாரடைப்புக்கான கதவு உடனடியாக திறந்து விடப்படுகிறது. மாரடைப்பினை தவிர்ப்பதற்கு உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் மிக அவசியம் என்கிறார் போல்ஸ்லே. ஒரு முறையான இதய நோய் மருத்துவரிடம் தொடர்ந்து பரிசோதித்துக் கொள்வதன் மூலமும் மாரடைப்பிற்கான காரணிகளை கண்டறிந்திடவும் மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டு, ஆபத்தை குறைக்கவும் முடியும்.
ஆண்களுக்கான 2-வது பிரச்சனை தூங்கும் போது ஏற்படும் மூச்சுத்திணறல் (Sleep Apnea) ஆகும். அமெரிக்காவில் சுமார் 18 மில்லியன் பேருக்கு இருப்பதாக கணக்கிடப் பட்டிருக்கிறார்கள், இதில் பெரும்பாலானவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். குறட்டை விடுதல், இரவில் சிறுநீர் கழிக்கும் பொருட்டாக அடிக்கடி எழுந்திருத்தல், காலை வேளைகளில் தலைவலி வருதல் அல்லது எழுந்திருக்கும் போது வாய் உலர்ந்திருத்தல் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.
இந்த தூங்கும் மூச்சுத்திணறலை முறையாக கவனிக்காமல் விட்டு விட்டால், அது முற்றி பேராபத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இந்த நோய் நீண்ட நாள் இருப்பதன் விளைவாக இரத்த அழுத்தம், இதயம் செயலிழத்தல், மாரடைப்பு மற்றும் வலிப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே இந்த நிலையை உடனடியாக பரிசோதித்து சரி செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் போல்ஸ்லே. எடையைக் குறைப்பதன் மூலமும் இந்த சிக்கலைத் தீர்க்க முடியும் என்கிறார் போல்ஸ்லே. மேலும், தூக்க பரிசோதனை செய்வதன் மூலம் இந்த பிரச்சனையின் காரணத்தை அறிந்து, சரியான சிகிச்சை அளிக்கலாம் என்றும் பரிந்துரை செய்கிறார்.
மூன்றாவது பிரச்சனையாக இருப்பது உயர் இரத்த அழுத்தமாகும். குடும்ப வரலாறு மற்றும் அதீத உடல் பருமன் ஆகியவை தான் உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாகும். உடல் எடையைக் குறைப்பதன் மூலமும் இந்த பிரச்சனை வளர்வதற்கான ஆபத்தைக் குறைக்க முடியும். குறைவான உப்பு (சோடியம்) உள்ள உணவை சாப்பிடுதன் மூலமும் இந்த சிக்கலை எதிர்கொள்ள முடியும். பெரும்பாலானவர்கள் உப்பை தவிர்த்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கும் செயல்களுடன் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்பது தான் உண்மை.
அதிகமான கொழுப்பும், உறுதியான பாரம்பரிய தொடர்பும் தான் அடுத்த பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குடும்ப வரலாற்றில் இதுவரை இந்த பிரச்சனையை எதிர் கொள்ளாதவர்கள், இன்னமும் கூட அதிகமான கொழுப்பினை உடலில் கொண்டிருக்கலாம். உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் இந்த நோயை விரட்டும் ஆயுதங்களாகும். உங்களுடைய குடும்ப வரலாற்றில் உயர் கொலஸ்ட்ரால் என்ற பிரச்சனை இருந்தாலோ அல்லது உங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதாகத் தெரிந்தாலோ, இந்த பிரச்சனையைத் தவிர்ப்பதற்காக மீன் சாப்பிடலாம் அல்லது மீன் எண்ணெயை மாற்றாகப் பயன்படுத்தலாம்.
ஐந்தாவது மற்றும் இறுதியான ஆபத்தாக இருப்பது புற்றுநோய் ஆகும். குடல் புற்றுநோய் இருப்பதை கோலனோஸ்கோஃபி (Colonoscopy) வழியாக ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டியது அவசியமாகும். பரம்பரையாக இருந்தாலோ அல்லது 50 வயதிற்குப் பின்னரோ ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இந்த பரிசோதனையை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குடல் புற்றுநோயைக் குணப்படுத்துவது எளிதாகும். இதன் காரணமாகத் தான், ஆண் மற்றும் பெண் என அனைவரும் கோலன்ஸ்கோஃபியை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு வைத்திருப்பது உறுத்தலை ஏற்படுத்தினாலும், உங்களுடைய வாழ்க்கையை அது பாதுகாத்திடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்கிறார் போல்ஸ்லே.
Home
»
health
» ஆண்களுக்கு ஏற்படும் 5 முதன்மையான ஆரோக்கிய பிரச்சனைகளும்... எதிர்கொள்ளும் வழிமுறைகளும்...
Recent Posts
வாய் துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ்
உடலில் உள்ள பிரச்னைகளில் மிக மோசமானதும், சகிக்க முடியாததும் என்றால் அது வாய் துர்நாற்றம் தான். இதனா[...]
இது ஆண்களுக்கு மட்டும்: கண்டிப்பாக படிக்கவும்
பேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆண்கள[...]
நச்சுன்னு ஒரு 'இச்' கொடுத்தால் 80 மில்லியன் பாக்டீரியா பரவுதாம்: உஷார்!
தம்பதிகள் முத்தம் கொடுக்கையில் 80 மில்லியன் பாக்டீரியா பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர[...]
குழந்தைகளின் மன அழுத்தங்களுக்கு நிவாரணமாகும் வீடியோ ஹேம்
வீடியோ ஹேம் விளையாடுவதினால் பல்வேறு எதிர்விளைவுகள் காணப்படுவதாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால் அதிலு[...]
நிம்மதியான தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய உணவுகள்
பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இவ்வாறு [...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.