↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தாவரங்களின் மரபணுக்களை பெற்று மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(Cambridge University) கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணமான மரபணு குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதில், மனிதர்கள் மரபணுக்களை தனது இனத்திடமிருந்து மட்டும் பரிமாற்றம் செய்துக்கொண்டனரா அல்லது வேறு இனத்திலிருந்தும் மரபணு பரிமாற்றம் நடந்துள்ளதா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்த ஆராய்ச்சியின் முடிவில், மனித இனமானது தாவரங்கள், நுண்ணிய தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளின் மரபணுக்களையும் பரிமாற்றம் செய்துகொண்டு பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த ஆராய்ச்சி முடிவிற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், தற்போது Horizontal Genetic transfer(HGT) எனப்படும் ‘கிடைமட்ட மரபணு பரிமாற்றம்’ என்ற முறையில் தாவரங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா மூலம் மனித இனத்திற்கு மரபணு பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சில விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதாவது, மற்ற இனங்களை போல, நேரடியான இனப்பெருக்கம் மூலம் வம்சாவளியை உருவாக்குவது மட்டுமில்லாமல், HGT முறையில் தன்னை சுற்றி வாழும் தாவரங்கள் உள்ளிட்ட உயிரனங்களின் மரபணுக்களை பெற்று மனித இனம் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களின் மரபணு பரிமாற்றம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் Dr. Alistair Crisp கூறுகையில், மரபணு பரிமாற்றத்தின் ஆரம்பக்கட்டத்தை பற்றி முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஆராய்ச்சியில், HGT மூலம் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மரபணுக்கள் பரிமாற்றம் நடந்துள்ளதை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரிதாக நிகழ்ந்திருக்கும் இந்த மரபணு பரிமாற்றமானது தற்போதும் அனைத்து விதமான விலங்கினங்களிலும்(மனிதர்கள் உள்பட) செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ’மனித இன பரிணாமம்’ குறித்து நமக்கு இருக்கும் கருத்தை வேறு கோணத்தில் சிந்திப்பது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top