↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது சூர்யா 'மாஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் மே மாதம் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. நயன்தாரா, ப்ரணிதா ஆகிய இரு கதாநாயகிகளுடன் பிரேம்ஜி அமரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யா தனது சொந்த நிறுவனமான 2D எண்டர்டெய்னர் நிறுவனத்தின் மூலம் ஹைக்கூ' என்ற படத்தை தயாரித்து வருகிறார். முழுக்க முழுக்க குழந்தைகள் நடிக்கும் இந்த படத்தை 'பசங்க' பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யா மற்றும் அமலாபால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் இடம்பெறும் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் நாளை முதல் படமாக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

குழந்தைகள் நட்சத்திரங்களுடன் இந்த படத்தில் பிந்து மாதவி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top