↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி, பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி கண்டது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது டோணி தலைமையிலான இந்திய அணி. உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை இந்தியா தோற்கடித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். இந்நிலையில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதும் ஆட்டம் வரும் 28ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி இந்திய அணி திங்கட்கிழமை பெர்த் வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய அணி நேற்று பயிற்சி மேற்கொண்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் வீரர்கள் அனைவரையும் பீல்டிங் பியிற்சியிலேயே கேப்டன் டோணி ஈடுபடுத்தினார். தென் ஆப்ரிக்காவுடனான ஆட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டோணி, பந்து வீச்சாளர்கள் மோகித் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் பீல்டிங் திறனை வெகுவாக பாராட்டியிருந்தார். தென் ஆப்ரிக்கா அணியை வெற்றி கொள்வதற்கு ரன் அவுட்களே முக்கிய காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
எனவே இந்திய அணி தற்போது பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது. பெர்த் நகரில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்திய அணி வீரர்கள் பீல்டிங் பயிற்சியை மேற்கொண்டனர். பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியை அவர்கள் மேற்கொள்ளவில்லை. பீல்டிங் பயிற்சியை சுவாரஸ்யமானதாக மாற்றும் வகையில் வீரர்கள் இரு அணிகளாகப் பிரிந்து போட்டி போட்டு பந்தைக் கொண்டு ஸ்டம்புகளை குறி பார்த்து எறிந்து பயிற்சி செய்தனர்.
Home
»
sports
»
sports.tamil
» ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்த இந்திய வீரர்கள் என்ன பயிற்சி எடுக்கிறார்கள் தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment