↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


விஜய் நடித்த பகவதி' படத்தில் அவருடைய தம்பியாக திரையுலகில் அறிமுகமான ஜெய், அதன்பின்னர் சென்னை 600028, சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் 'வலியவன்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மார்ச் மாதம் வலியவன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பினும், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' மார்ச் 6ஆம்தேதியும், கார்த்தி நடித்த 'கொம்பன்' மார்ச் 27ஆம் தேதியும் ரிலீஸாகவுள்ள நிலையில் சிம்புவின் 'வாலு' படமும் மார்ச் மாதம் திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜெய்யின் 'வலியவனும்' மார்ச் போட்டியில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய், ஆண்ட்ரியா முதன்முதலில் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தை எங்கேயும் எப்போதும் புகழ் சரவணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 9ஆம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top