↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
22 வயதில் சினிமா தயாரிப்பாளரான பொறியியல் கல்லூரி மாணவர்..!
சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற  பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர்  தற்போது 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். அவர் தயாரிக்கும் முதம் படம்தான் இந்த  ’அவளுக்கென்ன அழகிய முகம்’ . இப்படத்தை இயக்குபவர் ஏ.கேசவன். இது இவருக்கும் முதல் படம்.
காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்பதுதான் கதை. இது காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம்.
நடிப்பவர்கள் பலரும் புதியவர்களே. பூவரசன், விஜய் கார்த்திக், விக்கி ஆதித்யா, சபரி என நான்குபேர் நாயகர்களாக  அறிமுகமாகிறார்கள். பிரதான நாயகியாக டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் அறிமுகமாகுகிறார். ரூபாஸ்ரீ. சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் ஹீரோயின்களா நடிக்கிறார்கள்.
கதைக்களம் கோவை என்றாலும் மதுரைக்கும் கதை பயணிக்கிறது. கோவை, மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஒளிப்பதிவு – நவநீதன். இசை டேவிட் ஷார்ன். இவர் மலையாளம், இந்தியில் ஆல்பங்கள் இசையமைத்தவர். படத் தொகுப்பு. கோபிகிருஷ்ணா, நடனம் – ஷங்கர், ஸ்டண்ட் – எஸ்.ஆர்.முகேஷ், கலை இயக்கம் – எட்வர்ட் கென்னடி.
படத்தில் 5 பாடல்கள். எல்லாவற்றையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஐந்தும் வெவ்வேறு நிறம் வெவ்வேறு தளம் என்று சொல்லும்படி இருக்கும். நட்பு, காதல், பயணம், தோல்வி, தாய்ப் பாசம் இப்படி பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப்பேசும்.
கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில்  எம்.எஸ். கதிரவன்  தயாரிக்கும் இந்த ‘அவளுக்கென்ன அழகிய முகம்’  படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top