↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சன்னி லியோன் கலக்கும் ஒன் நைட் ஸ்டேன்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புதுமுகம் தனுஜ் விர்வானி. சன்னி லியோன் தற்போது, ''ஏக் பெகலி லீலா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். உளவுத்துறை பெண்ணாக சன்னி லியோன் நடிக்கும் இப்படத்தை பாபிகான் இயக்குகிறார். இப்படத்தில், 'டோலி தாரோ டோல் பாஜே...'' என்ற பாடலுக்காக கடும் வெயிலில் நடனமாடியுள்ளார் சன்னிலியோன்.
இந்தப்பாடல் ஏற்கனவே சல்மான்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான, ''ஹம் தில் தே சுகி சனம்'' என்ற படத்தில் இடம்பெற்றுள்ள 'டோல் பாஜே...' பாடல் தான். இதைத்தான் இப்போது ரீ-மேக் செய்துள்ளனர். சமீபத்தில் படமாக்கப்பட்ட இப்பாடலில் சன்னி லியோன் உடன் சுமார் 500 நடன கலைஞர்களும் சேர்ந்து ஆடியுள்ளனர். ராஜஸ்தான் நடன பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்பாடலில் கொளுத்தும் வெளியிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கும் ஒன் நைட் ஸ்டேன்ட் படம் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நாயகனாக ராணா டக்குபதி நடிக்க இருந்தது, ஆனால் தற்போது அவருக்கு பதிலாக தனுஜ் விர்வானி நடிக்கிறார். இந்த தனுஜ் விர்வானி பழைய பாரதிராஜா நாயகி ரதியின் மகனாவார். ஜேஸ்மின் டி சைவுசா இயக்கி வரும் இப்படத்தில் மதுரிமா கிளாமர் நாயகியாக நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். கவர்ச்சி ஏரிகள் மோதப்போகும் இந்தப் படத்தில் கவர்ச்சி சுனாமியே வீசலாம் என்கிறார் இயக்குநர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.