↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்துஜோசப் இயக்கிய இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள நிலையில் மீண்டும் கமல்ஹாசனை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இம்முறை அவர் அமீர்கான் நடித்த பிகே படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குவார் என தெரிகிறது.

இதுகுறித்து இயக்குனர் ஜீத்துஜோசப் கூறியபோது, 'பிகே' படத்தின் தமிழ் ரீமேக் படத்தை இயக்க ஒரு முன்னணி நிறுவனம் தன்னை அணுகியது உண்மைதான் என்றும், கமல்ஹாசனிடம் இதுகுறித்து கலந்து பேசிய பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

பாபநாசம் படத்தின் படப்பிடிப்பின்போது ஜீத்துஜோசப்பின் அணுகுமுறை கமல்ஹாசனை மிகவும் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை அவருடைய இயக்கத்தில் கமல் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. மேலும் அமீர்கானின் பிகே திரைப்படம் கடவுள் குறித்த சர்ச்சைக்குரிய பல விஷயங்களை கூறும் திரைக்க்கதை என்பதால் இந்த படத்தில் கமல் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top