↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தற்போது கோலிவுட்டில் ஒரு இசையமைப்பாளரின் இசையில் மற்றொரு இசையமைப்பாளர் பாடி வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'ஐ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடிய 'மெர்சிலாயிட்டேன்' பாடல் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் டி.இமான் இசையிலும் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் விறுவிறுப்பாக வளர்ந்து வரும் ரோமியோ ஜூலியட்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள 'டண்டனக்கா' என்று தொடங்கும் இந்த பாடல் சிங்கிள் டிராக்காக நாளை வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். குத்துப்பாடலாக உருவாகியிருக்கும் இந்த சிங்கிள் டிராக் இளைஞர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, ஹன்சிகா, வம்சி கிருஷ்ணா, பூனம் பஜ்வா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்த படத்தை லக்ஷ்மண் இயக்கியுள்ளார். செளந்திரராஜன் ஒளிப்பதிவில் அந்தோணியின் எடிட்டிங்கில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top