↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வரும் 28ம்தேதி இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் பெர்த் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தும்போது, நாடே இந்தியாவுக்கு சப்போர்ட் செய்தாலும், மும்பை மற்றும் பாலக்காடு நகரங்களின் அருகேயுள்ள கிராமங்களிலுள்ள மக்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்குத்தான் கரகோஷங்களை எழுப்பப்போகின்றனர். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிடேர்ஸ் அணிகள் வரும் 28ம்தேதி, சனிக்கிழமை, ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இந்த போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது அபிமான மோக்கா.. மோக்கா விளம்பரத்தை வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளது.

துபாய் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில், விளையாடும் வீரர்களில் 2 பேர் இந்தியர்களாகும். ஒருவர், கிருஷ்ண சந்திரன். இவர் கேரளாவின் பாலக்காடு நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர். மற்றொருவர் ஸ்வப்னில் பாட்டீல். மும்பை அருகேயுள்ள வாசை என்ற கிராமத்தை சேர்ந்தவர்.


எனவே,வரும் 28ம்தேதி, கொல்லங்கோடு மற்றும் தர்பாலே கிராமங்கள், ஐக்கிய அரபு எமிரேட்சுக்காக கை தட்டப்போகின்றன. இதில் பாலக்காட்டு மாதவனை பற்றி நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். வாசகர்களுக்கு ஸ்வப்னில் பாட்டீல் பற்றிய அறிமுகம்தான் தேவை.

மும்பை ரஞ்சி கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என்று காத்திருந்த கண்கள் பூத்து போன பாட்டீல், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகும். வரும் ஏப்ரல் 15ம்தேதியோடு 30 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள பாட்டீல், பிளைட்டை பிடித்து யூ.ஏ.இ சென்று அந்த அணிக்காக விளையாடத் தொடங்கியுள்ளார். இப்போது அந்த அணியின் டோணி பாட்டீல்தான். அதாவது விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்.

பாட்டீலின் தந்தை பிரகாஷ், தாய் பிரதிமா. 2 மாதங்கள் முன்புதான் மனாலி என்ற பெண்ணுடன் பாட்டீலுக்கு திருமணம் ஆகியுள்ளது. "எங்கள் கிராமத்திற்கு பாட்டீலால் பெருமை கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் உலக கோப்பை என்பது மிகப்பெரும் மேடை. எங்களுக்கு இது ஒரு கனவு போட்டியாகும். இந்தியாவுடன் சேர்த்து இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் கைதட்டுவோம்" என்கிறார் பாட்டீல் தந்தை பிரகாஷ்.

உலக கோப்பை போட்டிகளை கிராம மக்களுக்கு காண்பிப்பதற்காக பிரகாஷ் தனது வீட்டுக்குள் பெரிய திரையை அமைத்துள்ளார். உலக டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோது கிராமத்தின் வயல் வெளியில் இதுபோல திரை கட்டி ஊர்மக்களை கூட்டி வைத்து காண்பித்துள்ளார் பிரகாஷ். இம்முறை காலை நேரத்தில் போட்டி ஆரம்பிப்பதால், வீட்டுக்குள் வைத்து கிரிக்கெட் போட்டியை காண ஏற்பாடு செய்துள்ளாராம்.

ஊர்க்காரர்கள் சிலர் கூறுகையில், "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாட்டீல் சதம் அடிக்க வேண்டும். ஆனால் இறுதியில் இந்தியா வெல்ல வேண்டும்" என்று தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர்.

"எனது மகனுக்கு மகாராஷ்டிரா அணியின் சார்பில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் கான்ட்ராக்டிங் கம்பெனியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக பாட்டீல் விளையாடிய போட்டிகளின் வீடியோவை பார்த்துவிட்டு யோகி குரூப் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாட அந்த அழைப்பு வந்தது. அப்படித்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது" என்கிறார் பிரகாஷ். பெஸ்ட் ஆப் லக் பாட்டீல்...

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top