திருநங்கைகள் என்றாலே ஒதுக்கும் இந்த சமூகத்தில் இவரை போன்றவர்களால் தான் அனைத்து திருநங்களைகளுக்கும் மரியாதை கிடைக்கிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் சிறந்த மேக்கப் ஆர்டிஸ்டாக விளங்குபவர் திருநங்கை அவினாஷ்.
இவர் அமலா பால், பூர்ணா, நஸ்ரியா போன்ற பல திரைப்பிரபலங்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்டாக பணி புரிந்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகளுக்கு இவர் தான் மேக்கப் ஆர்டிஸ்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு இந்த வருடத்திற்கான சிறந்த மேக்கப் கலைஞர் விருது கிடைத்துள்ளது. இதை தன் பேஸ்புக் பக்கத்தில் இவர் பகிர்ந்துள்ளார். அவினாஷ் அவர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment