↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஹலோ தலைவரே.. சொத்துக் குவிப்பு அப்பீல் கேஸிலே ஆதாரங்களைக் கொடுங்கன்னு நீதிபதி கேட்டப்ப ஜெ. தரப்பு வக்கீல்கள் பம்முனாங்க. அவங்க வாதம் முடிஞ்ச பிறகு, அரசு வக்கீல் பவானி சிங்கும் சொத்துக்குவிப்பை உறுதிப்படுத்துற ஆவணங்களை எடுத்துக் கொடுக்காம பம்முறாரே.
சூது கவ்வும் படத்துல, இதை இட்லின்னு சொன்னா சட்னியே நம்பாதுன்னு ஒரு டயலாக் வரும். பவானி சிங்கை அரசு வக்கீல்னு சொன்னா கர்நாடக ஹைகோர்ட்டிலே இருக்கிற சக வக்கீல்களே நம்பமாட்டேங்குறாங்களாம்.
ஏன்னா, ஸ்பெஷல் கோர்ட்டிலேயே பவானி சிங் வாதாடலை. அவருக்கு அஸிஸ் டெண்ட்டா இருந்த மராடிதான் இறுதிக்கட்டத்திலே அழுத்தமான வாதங்களையும் ஆவணங்களையும் எடுத்து வச்சாரு. அவர் பழைய அரசு வக்கீல் ஆச்சார்யாவோட ஜூனியர்.
ஹைகோர்ட்டிலே நீதிபதி குமாரசாமி ஏற்கனவே ஜெ. தரப்பு வக்கீல்களைப் பார்த்து, நீங்க உரிய ஆவணங்களைக் காட்டாம வாயாலேயே சொல்லிக்கிட்டிருந்தீங்கன்னா, குன்ஹா கொடுத்த தீர்ப்பைத்தான் நானும் கொடுக்க வேண்டிவரும்னு ஓப்பன் கோர்ட்டிலேயே சொல்லியிருந்ததை நம்ம நக்கீரனிலே கவர் ஸ்டோரியாவே போட்டிருந்தாங்க.
இப்ப பவானி சிங்கிட்டயும் ஓப்பன் கோர்ட்டிலேயே நீதிபதி, உங்க மௌனத்தில் ஏதோ உள்நோக்கம் இருக்குது. நீங்க உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கலைன்னா நீதிமன்றமே அந்த ஆவணங்களைத் தேடி எடுக்கவேண்டியிருக்கும். உங்க எதிர்காலப் பணிகளுக்கு அது சங்கடத்தை உருவாக்கிடும்னு சொல்லிட்டாரு.
பவானிசிங்கை அரசு வக்கீல் பணியிலிருந்து நீக்கணும்னும், பேராசிரியர் அன்பழகனை இந்த அப்பீல் வழக்கில் ஒரு பார்ட்டியா சேர்க்கணும்னும் தி.மு.க தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் போட்ட மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்குவதா சொன்னதால, வியாழக்கிழமை யன்னைக்கே அது பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாயிடிச்சி.
ஆனா, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து இதை விசாரிக்கப்போற தில்லைன்னும் வேற நீதிபதிக்கு பரிந்துரைக்கிறதாகவும் சொன்னாரு. தி.மு.க தரப்பிலோ, வெள்ளிக்கிழமையே விசாரிச்சி தீர்ப்பு கொடுத்தா தான் சரியா இருக்கும். இல்லைன்னா ஹோலி பண்டிகைக்காக சனிக்கிழமையிலிருந்து 10 நாளு கோர்ட் லீவு.
அந்த கேப்பிலே கர்நாடக ஹை கோர்ட்டில் சொத்துக் குவிப்பு அப்பீல் கேஸில் எல்லாத் தரப்பு வாதமும் முடிஞ்சிடும். மார்ச் 5-ல் வாதங்கள் முடிந்து, 25 தேதிக்குள்ளே தீர்ப்பு வந்திடும்னு எதிர்பார்க்கப்பட்டதால... சுப்ரீம் கோர்ட்டில் போட்டிருக்கிற மனு மேலே விசாரணை லேட்டானால், பலனிருக்காதுன்னு தி.மு.க சைடு பதட்டமா இருந்தது.
அதே நேரத்தில், கர்நாடக ஹைகோர்ட்டில் மார்ச் 3-ந் தேதி வரைக்கும் பவானி சிங்குக்கு நீதிபதி குமாரசாமி அவகாசம் கொடுத்துட்டாரு. அதனால தி.மு.க சைடிலும் கொஞ்சம் நிம்மதி.
அப்பீல் கேஸ் இப்படி பரபரப்பா இருக்குதே.. ஜெ.வோட ரியாக்ஷன் என்னவாம்?
அவரை அமைச்சர்களாலகூட பார்க்க முடியலையாம். அவசர செய்தின்னாகூட இன்டர்காமில் மட்டும்தான் பேச முடியுதுங்குறாங்க. அப்பீல் கேஸ் போகிற போக்கில் ஜெ.வுக்கு நம்பிக்கையில்லை.
நீதிபதி குமாரசாமி தன் தரப்பு வக்கீல்கள்கிட்டே தினமும் கேட்ட கேள்விகளும் அதற்கு வக்கீல்கள் திணறியதும் ஜெ.வுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலை. பதில் சொல்லாமல் இருந்த அரசு வக்கீல் பவானிசிங் மேலேயும் அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லையாம்.
தன்னோட பீஸுக்காக தமிழ்நாடு கவர்மெண்ட் அதிகாரிகளோடு பவானிசிங் வாக்கு வாதம் செஞ்சதெல்லாம் ஜெ.வுக்கு சரியாப்படலை. கர்நாடக ஹைகோர்ட்டும் குன்ஹாவோட ஸ்பெஷல் கோர்ட் மாதிரிதான் இருக்கும்னு அவர் நினைப்பதால, சுப்ரீம் கோர்ட் அப்பீலில் பார்த்துக்கலாம்ங்கிற மனநிலைக்கு அவர் வந்துட்டாராம்.
அங்கே நிச்சயம் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்னு உறுதியா நம்புறாராம். ஹைகோர்ட்டிலே குன்ஹா கோர்ட் மாதிரியே 4 வருட தண்டனைத் தீர்ப்பு வந்தா, இப்ப கிடைச்சிருக்கிற ஜாமீன் ரத்தாயிடும். மறுபடியும் சிறைக்குப் போற நிலைமை உருவாகும். அதை எப்படி சமாளிக்கிறதுங்கிறது பற்றி டெல்லி சீனியர் வக்கீலோடு ஆலோசனை நடந்திருக்குது.
உளவுத்துறை தரப்பிலிருந்து, நாங்க ரிப்போர்ட் தர்றோம்னு சொன்னப்ப ஜெ. வேண்டாம்னுட்டாராம். ஜெ. தைரியத்தை பாராட்டியபடியே கார்டனோடு நெருக்கமா இருக்கிற அதிகாரிகள்கிட்டே உளவுத்துறைக்காரங்க நியூஸ் கொடுத்துக்கிட்டுத் தான் இருக்காங்க.
இத்தனை பரபரப்பிலும் ஜெ.வின் 67வது பிறந்தநாள் கொண்டாட்டங்களும் ஒரு மாத காலத்துக்கு நடக்குதாமே?
அதுதான் ஜெ.வோட அரசியல் டெக்னிக். குன்ஹாவோட தீர்ப்பு நாள் நெருங்கிக்கிட்டிருந்தப்பவும் 30 நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்தி அதில் தினமும் 110 ஸ்டேட்மெண்ட் படிச்சாரு ஜெயலலிதா. லைவ்வா இருந்தாதான் தீர்ப்பு எப்படி வந்தாலும் கட்சிக்காரங்க ரியாக்ட் பண்ணுவாங்கங்கிற டெக்னிக் தான் இது.
இப்பவும் ஒரு மாதகாலத்துக்கு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடச் சொன்னதில் இந்த டெக்னிக் அடங்கியிருக்குதாம். கட்சிக்காரங்க ஆக்டிவ்வா இருக்கிறப்ப, கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதற்கேற்ற மாதிரி ஆளுங்கட்சிக்காரங்க ரியாக்ட் பண்ணு வாங்கங்கிறதாலதான் மார்ச் மாத கடைசி வாரம் வரைக்கும் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும்படி ஓ.பி.எஸ் மூலமா உத்தரவிடப்பட்டிருக்குதாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top