
சமூக வலைதளங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டால் போதும் அதை விட்டு விலக யாராலும் முடிவதில்லை. அதுவும் கதாநாயகிகள் சொல்லவே வேண்டாம், எது செய்ய மறந்தாலும் டிவிட்டரில் பதிவு செய்ய மறக்க மாட்டார்கள்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் சமந்தா நான் டிவிட்டரை விட்டு சிறிது காலம் விலகி இருக்க போகிறேன் என்று டுவிட் செய்திருந்தார். சமந்தாவின் இந்த டுவிட்டால் பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திடீரென சமந்தா மீண்டும் டிவிட்டரில் இணைந்து பதிவுகளை போட்டு அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, உங்கள் பதில் டுவீட்டுகளால் மகிழ்ச்சியடைந்தேன். இதற்கு மேல் எதுவும் கேட்கப் போவதில்லை. யாரோ ஒருவர் அதிகமாகப் பேசிக் கொண்டே இருந்தார். அதைப் பற்றி மட்டும்தான் நான் இப்போது சொல்ல முடியும் என்று டிவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகிய காரணத்தை கூறியுள்ளார் சமந்தா.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.