அமெரிக்காவில் இந்திய யோகா குரு ஒருவர் மீது 6 பெண்கள் பாலியல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட யோகா குரு பிக்ரம் சவுத்ரி (69) என்ற இந்திய அமெரிக்கர், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருகிறார். 3 வயதில் யோகா கற்கத் தொடங்கி வல்லுனர் ஆன இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர். இவர் சுயமாக 26 யோகா நிலைகளை கண்டுபிடித்துள்ளார். அவற்றை 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் உள்ள அறையில், உடலோடு ஒட்டி உறவாடும் இறுக்கமான உடை அணிந்துதான் செய்ய வேண்டும் என்று பயிற்றுவிக்கிறார். இந்நிலையில், இவரிடம் யோகா கற்க வந்த பெண்களை பலாத்காரம் செய்ததாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக, 6 பெண்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்து பலாத்காரம் செய்ததாக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவர் மீது 6-வது வழக்கை சமீபத்தில் தொடர்ந்த ஜில் லாலர் என்ற கனடிய பெண் இவரிடம் முதலில் யோகா பயிற்சி பெற்று, பின்னர் அவரது நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவர் தனது வழக்கில், நான் யோகா குருவிடம் 18 வயதில் யோகா கற்பதற்காக 2010-ம் ஆண்டு சென்றேன். அவர் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் பின்னிரவில் இந்திப் படங்கள் பார்ப்பார். அப்போது எனக்கு முதலில் பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்ததோடு, பல முறை என்னை பலாத்காரம் செய்தார். அவர் இது தொடர்பாக ஒவ்வொரு முறையும், நான் செத்துக்கொண்டிருக்கிறேன், நீதான் என்னை காப்பாற்ற வேண்டும். நான் உன்னுடன் உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் செத்து விடுவேன். மேலும், நீ என் உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாய் என்று கூறியுள்ளதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிக்ரம் சவுத்ரி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் மேரி சியா கூறுகையில், பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களின் புகாரின் மைய குற்றச்சாட்டு, தாங்கள் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டு விட்டதுதான். ஆனால் 6 பேரின் புகாரும் வெவ்வேறானவை என்பதால் ஒரே வழக்காக அவற்றை இணைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். |
காமலீலைகள் புரிந்த இந்திய யோகா குரு: அடுக்கடுக்கான பாலியல் புகார் (வீடியோ இணைப்பு)
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment