↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது கேரளாவில் தனது கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் 'புலி' படக்குழுவினர், அங்குள்ள மலைப்பிரதேசமான வாகாமன் (Vagamon) என்ற பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கொடைக்கானலுக்கு சமமான மலைப்பிரதேசமான அந்த பகுதி இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா பகுதிகளில் ஒன்று. இங்கு ஒரு பாடல் காட்சியும், சில முக்கிய காட்சிகளும் படமாக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

விஜய்-ஸ்ருதிஹாசன் முதல்முறையாக ஜோடி சேரும் இந்த படத்தில் ஸ்ரீதேவி அரசியாகவும், ஹன்சிகா இளவரசியாகவும் நடிக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் பிரபுவும் சுதீப்பும் நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top