↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களில் சுருண்டது.
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதும் உலகக்கிண்ண தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடிப்பெடுத்தாடியது.
ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சில் திக்குமுக்காடிப் போன எமிரேட்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் அன்வர் மட்டும் அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார்.
குராம் 14 ஓட்டங்களும், மஞ்சுள 10 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் நடையை கட்டினர். இதனால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய தரப்பில், சுழலில் அசத்திய அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், மொகித் சர்மா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
103 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top