↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்திய அணியின் பெரிய நட்சத்திர வீரர்களை பார்த்து நாங்கள் பயப்படவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது தாகிர் கூறியுள்ளார். இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் பெர்த் மைதானத்தில், இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோத உள்ளன. இரு அணிகளுமே இதற்காக தயாராகிவருகின்றன.
இந்தியா இதுவரை மோதிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது. இருப்பினும் கடைசி வரை போட்டியை அளித்தே தோற்றுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி கேப்டன் முகமது தாகிர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் பெரிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர் என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும், இதற்கு முன்பு நாங்கள் ஆடிய இரு போட்டிகளைப்போலத்தான் இதையும் நினைத்துக் கொண்டுள்ளோம்.
எங்களைப் பொறுத்தளவில், இது மற்றொரு விளையாட்டு அவ்வளவுதான். இந்திய வீரர்களின் பெயர்கள், அந்த அணியின் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
தாகிர் 2004ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் களமிறங்கினார். ஜாகிர்கான், அனில் கும்ப்ளே போன்ற பவுலிங் தாக்குதல்களை எதிர்கொண்டு அந்த போட்டியில் அரை சதமும் அடித்தார். இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தாகிர், 89 ரன்கள் எடுத்துள்ளார். ஆப்-ஸ்பின் பந்து வீச்சு மூலம், 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
தாகிர் மேலும் கூறுகையில், ஜிம்பாப்வேக்கு எதிராக ஆடியதைவிடவும், அயர்லாந்துக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் திறன் மேம்பட்டுதான் வருகிறது. எனவே, இப்போது வெற்றி பெறுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி. இதுவரை இரு போட்டிகளிலுமே வெற்றிக்கு அருகே சென்றுதான் தோற்றுள்ளோம். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில், பாலக்காட்டை சேர்ந்த கிருஷ்ண சந்திரன், மும்பையை சேர்ந்த ஸ்வப்னில் பாட்டில் ஆகிய இரு இந்தியர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» இந்தியாவின் நட்சத்திர வீரர்களை பார்த்து பயமில்லை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் அதிரடி பேட்டி!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment