↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய ஸ்டைலிஷ் இயக்குனராகத்தான் கவுதம் மேனனை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். ஆனால் அவர் ஒரு சிறந்த பாடகர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை நிரூபிக்கும் வகையில் கவுதம் மேனன் பாடிய பாடல் ஒன்று நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவுதம் மேனனின் மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவரான ராதா மோகன் இயக்கி வரும் 'உப்பு கருவாடு' திரைப்படத்தில் வரும் ஒரு பாடலைத்தான் கவுதம்மேனன் பாடியுள்ளார். கவுதம் மேனன் ஏற்கனவே ஒருசில பார்ட்டிகளில் மிக அருமையாக பாடியதை தான் அறிந்திருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஸ்டீவ், கவுதம் மேனனின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த படத்தில் ஒரு பாடலை பாட தான் கவுதம் மேனனை அணுகியபோது அவர் மறுப்பேதும் கூறாமல் தன்னுடைய 'உப்புக்கருவாடு' படத்திற்காக ஒரு பாடலை பாடிக்கொடுத்ததாக இயக்குனர் ராதா மோகன் கூறியுள்ளார்.

உப்புக்கருவாடு படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளதாகவும், கவுதம் மேனன் பாடிய இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளதாகவும் ராதா மோகன் மேலும் கூறியுள்ளார். இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் கருணாகரன் மற்றும் அட்டக்கத்தி நந்திதா நடித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top