↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அடுத்த உலக கோப்பை போட்டியை 40 ஓவர்கள் கொண்டதாக மாற்ற ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு மொத்தம் 60 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1979 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டிகள் 60 ஓவர்களாகவே நடத்தப்பட்டன.
1987ம் ஆண்டுதான் உலக கோப்பையில் முதல்முறையாக 50 ஓவர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு நடப்பு உலக கோப்பை வரையிலும் 50 ஓவர்களே நடைமுறையில் உள்ளது.
தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ளன. 20 ஓவர்களில் போட்டிகள் முடிவடைவதை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு 50 ஓவர்கள் முடியும்வரை மைதானத்திலோ, டிவி பெட்டிகளின் முன்போ உட்கார்ந்திருக்க பொறுமை இல்லை.
எனவே, அடுத்த உலக கோப்பையில் இருந்து மொத்த ஓவர்களை 40ஆக குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
ஐசிசிக்கு இந்த பரிந்துரையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பலம் பொருந்திய நாடுகள் நெருக்கடி கொடுத்தால் அடுத்த ஆண்டு உலக கோப்பையை 40-40 போட்டியாக கண்டு ரசிக்கலாம்.
Home
»
sports
»
sports.tamil
» ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓவர்களை 40-ஆக குறைக்க ஐசிசி திட்டம்! அடுத்த உலக கோப்பையில் அமுல்?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment