↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிசாசு இயக்குனர் மிஷ்கின் தனது உதவியாளர் வடிவேல் இயக்கிய 'கள்ளப்படம்' என்ற படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த படத்தின் இசை உரிமையை விஷாலின் 'விஷால் மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விஷால் மற்றும் மிஷ்கின் இணையும் படமாக 'கள்ளப்படம்' மாறியுள்ளது.

மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய்', முகமூடி போன்ற படங்கள் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த 'கே' இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கூத்துப்பட்டறையை மையமாக வைத்து அமைக்கப்பட்ட திரைக்கதை கொண்ட இந்த படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. இதில் 'வெள்ளக்கார ராணி' என்று தொடங்கும் டைட்டில் பாடலை மிஷ்கினே எழுதி பாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மற்ற பாடல்களை கூத்துப்பட்டறையை சேர்ந்த நிஜக்கலைஞர்களே பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் வரும் மார்ச் மாதம் இந்த படம் திரையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top