↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad oscar awardஉலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 87-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. 2015-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ…

* சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனே வென்றார். தி தியரி ஆஃப் எவ்ரிதிங் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
* சிறந்த நடிகைக்கான விருதினை ஜூலியன் மூர் வென்றார். ஸ்டில் அலைஸ் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
• சிறந்த இயக்குநருக்கான விருது பேர்ட்மேன் படத்தை இயக்கிய அலெஜான்ட்ரோ ஜி இனாரிட்டுக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இவர் வென்றார்.
• சிறந்த அசல் (ஒரிஜினல்) இசைக்கான விருதினை அலெக்சாண்டர் டேஸ்ப்ளாட் பெற்றார். படம்: தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்.
• சிறந்த அசல் (ஒரிஜினல்) பாடலுக்கான விருதினை ஜான் ஸ்டீபன்ஸ் மற்றும் லோனி லின் பெற்றனர். பாடல்: க்ளோரி. படம்: செல்மா.
• சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருது, பேர்ட்மேன் படத்துக்காக அலெஜான்ட்ரோ ஜி இனாரிட்டு, நிகோலஸ் ஜாக்கோபோன், அலெக்சான்ட் டைன்லாரிஸ் ஜூனியர், அர்லென்டோ போ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
• சிறந்த ‘தழுவல்’ (அடாப்டட்) திரைக்கதைக்கான விருது கிரகாம் மூருக்கு வழங்கப்பட்டது. தி இமிடேஷன் கேம் படத்துக்காக இந்த விருதினை வென்றார்.
* சிறந்த உறுதுணை நடிகை – பாட்ரிசியா (பாய்ஹுட் | Boyhood)
* சிறந்த சவுண்ட் எடிட்டிங் – ஆலன் ராபர்ட் முர்ரே, பப் ஆஸ்மன் (அமெரிக்கன் ஸ்னைப்பர் – American Sniper)
* சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – கிரெய்க் மன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி (விப்லாஷ் | Whiplash)
* சிறந்த ஷார்ட் சபெஜ்க்ட் ஆவணப் படம் – கிரைஸிஸ் ஹாட்லைன்: விடேரன்ஸ் பிரஸ் 1 | Crisis Hotline: Veterans Press 1
(டானா ஹெயின்ஸ் பெர்ரி, ஹெலன் கூஸர்பெர்க் கென்ட்)
* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – தி போன் கால் | The Phone Call (மேட் கிரிக்பி, ஜேம்ஸ் லூகாஸ்)
* சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் – ஈடா | IDA (போலந்து)
* சிறந்த ஒப்பனை – மார்க் கவுலியர், ஃபிரான்ஸஸ் ஹன்னான் (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
* சிறந்த ஆடை வடிவமைப்பு – மெலினா கெனானிரோ (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
* சிறந்த உறுதுணை நடிகர் – ஜே.கே.சிம்மன்ஸ் (விப்லாஷ் | Whiplash).

இவ்விழாவில் சிறந்த சவுன்ட் மிக்சிங் கலைஞருக்கான விருது ‘WHIPLASH’ என்ற படத்தில் பணிபுரிந்த கிரேக்மேன் (CRAIGMAAN) பெற்றுள்ளார். இப்படத்தில் கிரேக்மேனுடன் இணைந்து BEN WILKINS, THOMAS CURLEY ஆகியோரும் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சவுன்ட் மிக்சிங் டெக்னீஷியனுக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ள கிரேக்மேன் தான் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்திலும் சவுன்ட் மிக்சிங் வேலைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top