↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தல ரசிகர்களை கவர சிவகார்த்திகேயனோடு போட்டிபோடும் சூர்யா! - Cineulagam
மே 1 - உழைப்பாளர் தினத்தோடு சேர்த்து, தல அஜித்தின் பிறந்தநாள் என்பதால் மே 1ல் பல படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்..
சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வரும் ரஜினி முருகன் படம், மே 1ம் தேதி வெளியாகும் என்று சில மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஏப்ரல் 18ம் தேதி தான் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது.
அதனால் இப்போது ரஜினி முருகன் படத்திற்கு பதிலாக சூர்யாவின் 'மாஸ்' படத்தை அந்த தேதியில் வெளியிட ஸ்டூடியோ கிரீன் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இரண்டு படத்தில் ஏதாவது ஒன்று தான் மே 1ம் தேதி வெளியாகும் .
வெங்கட் பிரபு இயக்கி வரும் மாஸ் படத்தில் சூர்யாவோடு நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்வதால், ரசிகர்களில் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. சூர்யாவின் முந்தைய படமான அஞ்சான் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என்பதால், மாஸ் படம் ரசிகர்களை வெகுவாக கவர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சூர்யா நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top