↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யபட்டு வருகிறது. ஏற்கனவே தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் தமிழிலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தற்போது அந்த படம் போஸ்ட் புரடொக்ஷன் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மோகன்லால் வேடத்தில் அஜய் தேவ்கான், நடிக்க அவருடைய மனைவியாக நடிக்க நடிகை ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் இல்லாத ஸ்ரேயாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஸ்ரேயா முதன்முதலில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க தபு' ஒப்பந்தமாகியுள்ளார். நிஷிகாந்த் கமல் இயக்கவுள்ள இந்த படத்தை குமார் மங்கத் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் கோவாவில் தொடங்கவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment