லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன், விஜய் சந்தித்து பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
லிங்கா நஷ்ட ஈடு தொடர்பான சர்ச்சையில் இரண்டு நடிகர்கள் தலையிட்டு நஷ்டஈடு தரவிடாமல் தடுக்கிறார்கள் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். விஜய்தான் ரஜினியை தடுக்கிறார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் விஜய் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் விஜய்யும், லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே. தற்போது விஜய்யுடனான புகைப்படம் குறித்தும் சிங்காரவேலன் விளக்கமளித்துள்ளார்.
சிங்காரவேலன் கூறியவை:
நான் விஜய் சாரை சந்தித்தது உண்மை தான். லிங்கா பிரச்சனையில் எந்தொரு இடத்திலும் விஜய் சாரின் பெயரை நாங்கள் உபயோகிக்கவில்லை. ஆனால், லிங்கா பிரச்சனையினுள் விஜய்யை இழுத்து விட்டு செய்திகள் வெளியிட்டார்கள். இதனால் விஜய் மனவருத்தத்தில் இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் என்னிடம் தெரிவித்தார். எனவே தான் அவரிடம் விஜய்யை சந்தித்து பேசுவதாக தெரிவித்தேன்.
நான் விஜய்யை பார்ப்பதற்காக புலி படப்பிடிப்பிற்கு சென்ற போது, அவர் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்துக் கொண்டிருதார். அவரிடம் நாங்கள், எந்தொரு இடத்திலும் உங்கள் பெயரை உபயோகப்படுத்தவில்லை. ஆனால், தவறான செய்திகள் வெளிவந்துவிட்டது என்று அவரிடம் கூறினேன்.
அவரும் சரி பரவாயில்லை என்று கூறினார். அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அந்த படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தான் தவறு. அதை வைத்துக் கொண்டு மீண்டும் தவறாக எழுதுகிறார்கள் என்றார் சிங்காரவேலன்.
0 comments:
Post a Comment