↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
செல்வராகவன் இயக்கிய 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பின்னர் ஆர்யா மற்றும் அனுஷ்கா ஜோடி மீண்டும் தற்போது இணைந்து 'ஜீரோ சைஸ்' என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் பிரகாஷ் கோவலமுடி என்பவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நடிகைகள் மற்றும் இளம்பெண்களிடையே ஏற்பட்டுள்ள ஜீரோ சைஸ் கலாச்சாரம் குறித்த இந்த கதையில் அனுஷ்கா உடல் எடை அதிகமுள்ள மற்றும் மெலிந்த தேகம் என இருவித கெட்டப்புகளில் தோன்றுவார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும், முதலில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், ஆர்யா வரும் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் பரத், ஊர்வசி, ஆகியோர்களும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும் இது ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment