↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நடுவேயான போட்டியில், இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இணைந்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி புது உலக சாதனை படைத்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆஸ்திரேலியாவின் அந்த சரிவுக்கு காரணம்.
அதேபோல நியூசிலாந்தின் மற்றொரு இடது கை மிதவேகப் பந்து வீச்சாளர் கோரி ஆன்டர்சன் தனது முதலாவது ஓவரில் 6 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆக மொத்தம் 6 விக்கெட்டுகளை நியூசிலாந்தின் இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் இணைந்து வீழ்த்தினர்.
அடுத்ததாக நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது, ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர், மிட்சேல் ஸ்டார்க் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளிலும் உள்ள இடது கை வேகப்பந்து இணைந்து மொத்தம் 12 விக்கெட்டுகள் எடுத்துள்ளது இதுதான் முதல் முறையாகும். இதுதவிர இடது கை சுழல் பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது தனிக்கதையாகும். ஆனால் அது, இந்த சாதனை லிஸ்டில் வராது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» நியூசிலாந்து-ஆஸி. போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் புது சாதனை!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment