இங்கிலாந்தில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரவுண்ட் 16 ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து போட்டியில் நேற்று பார்சிலோனா- மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.
மான்செஸ்டரில் உள்ள எதியாட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், 80வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் நெய்மர் களத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார்.
சக வீரர்களுடன் நெய்மர் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது மான்செஸ்டர் சிட்டியின் ரசிகர் ஒருவர் நெய்மரை வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டார்.
அடிக்கடி அவர் நெய்மரை நெருங்கி, கையை அசைத்து அசைத்து சீண்டிக் கொண்டே இருந்தார். இதையடுத்து நெய்மர் அந்த ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
|
0 comments:
Post a Comment