↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29ல் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால், பிப்ரவரி 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த தனுஷின் "அனேகன்", பிப்ரவரிக்கு 20க்கு தள்ளி வைக்கப்பட்ட உள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியை அனேகன் படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

தனுஷின் 'அனேகன்' திட்டமிட்டுள்ளபடி பிப்ரவரி 13ஆம் தேதி வெளிவரும் என்றும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் படக்குழுவினர் திட்டவட்டமாக கூறியுள்ளனர். 

 
தனுஷ், அம்ரியா, கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ள அனேகன் திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபா வசனம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top