↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad Samsung நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ChatOn குறுஞ்செய்திச் சேவை நிறுத்தப்படவுள்ளது.
இதனை Samsung நிறுவனமே உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இச்சேவை நிறுத்தப்படவுள்ளது.
எனினும் அமெரிக்காவில் இச்சேவையை நிறுத்துவது தொடர்பாக சரியான திகதி ஒன்றினை குறிப்பிடப்படவில்லை.
இருந்த போதிலும் 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இச்சேவை முழுமையாக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமது ஏனைய பிரதான சேவைகளின் எதிர்கால நோக்கம் கருதியே இச்சேவை நிறுத்தப்படவுள்ளதாக சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top